பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்வு – ஸ்டாலின் கொடுத்த 3 ரூபாயில் 2.19 போச்சு

பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆகஸ்டு மாதம் வரை வரலாறு காணாத உச்சத்தில் இருந்து வந்த நிலையில், தமிழ்நாடு அரசு மூன்று ரூபாய் விலை குறைத்ததால் ரூ.102-க்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு கீழ் வந்தது. டீசலும் அதே போல் குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதியில் இருந்து பெட்ரோல் விலையும், கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் டீசல் விலையும் மீண்டும் உயரத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக விலை அதிகரித்து கொண்டே வருகிறது.

இதற்கிடையில், சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் 49 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 95 ரூபாய் 93 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 100 ரூபாய் 75 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து 96 ரூபாய் 26 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாடு அரசு மூன்று ரூபாய் குறைத்ததில் இன்றோடு 2.19 ரூபாய் அதிகரித்துவிட்டது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.

Leave a Response