நாட்டின் சொத்துகளை விற்பதா? – பாஜக அரசுக்கு மம்தா கண்டனம்

இந்திய ஒன்றியத்தின் பொதுச் சொத்துகளை விற்பனை செய்தும் குத்தகைக்கு விட்டும் 6 இலட்சம் கோடி திரட்ட ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 23 அன்று அறிவித்தார்..

எந்தெந்த சொத்துகளை விற்பனை செய்வது என்பது குறித்த விவரங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.

இந்த நிலையில் பாஜகவின் இந்த முடிவுக்கு இராகுல் காந்தி உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதுகுறித்துக் கூறியதாவது….

இது துரதிருஷ்டவசமான முடிவு, இந்தச் செய்தி குறித்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த முடிவைக் கண்டித்துப் பலர் என்னுடன் இணைவார்கள். நாட்டின் சொத்துகளை விற்கும் பாஜக அரசின் முடிவு துரதிர்ஷ்டமானது. நாட்டின் சொத்துகள் பாஜகவின் சொத்துகள் அல்ல, நாட்டின் சொத்துகளை விற்க முடியாது

இவ்வாறு அவர் ஆவேசமாகக் கூறியுள்ளார்.

Leave a Response