மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி இரகசிய தூது ?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை எட்டு மணி முதல் நடந்துவருகிறது.

தொடக்கத்திலிருந்தே தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலை வகித்துவருகிறது.

அறுதிப்பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களில் திமுக தனியாக முன்னிலை வகிக்கிறது.

இதனால் இன்னும் இரண்டு தினங்களில் திமுக ஆட்சி அமைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், எடப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறவிருக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவருக்கு இரகசிய தூது விட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

திமுக பொதுச்செயலாளர் மூலம் விடப்பட்டிருக்கும் தூதில், ஆட்சி அமைத்தவுடன் எனக்கும் என் மகனுக்கும் எந்தச் சிக்கலும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள. அப்படிச் செய்தால் காலமெல்லாம் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன் என்று கூறியிருக்கிறாராம்.

ஆட்சி மாற்றம் நடக்கவிருக்கும் நிலையில் உயர்மட்டங்களில் கிசுகிசுக்கப்படும் இந்தத் தகவல் உண்மைத்தன்மை சில நாட்களில் வெளிப்பட்டுவிடும்.

Leave a Response