திமுக அமோக வெற்றி – மே 5 இல் முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்

ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணி முதல் நடைபெற்று வருகிறது.

தொடக்கத்திலிருந்தே தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

மாலை 4 மணி நிலவரப்படி திமுக 118 இடங்களிலும் காங்கிரசு 16 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், விடுதலைச்சிறுத்தைகள் 3 இடங்களிலும் பொதுவுடைமைக் கட்சிகள் தலா 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

இதனால், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைவதும் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆவதும் உறுதியாகிவிட்டது.

மே 5 ஆம் தேதி புதன்கிழமையன்று திமுக ஆட்சிப் பொறுப்பேற்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் திமுக தொண்டர்கள் உற்சாகமாக வலம் வருகின்றனர்.

Leave a Response