அமைச்சர் வேலுமணி மனைவிக்குப் பல கோடி வருமானம் வந்தது எப்படி? – கோவை பரபரப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 234 தொகுதியிலும் 7,243 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நேற்று வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், கமலஹாசன், டி.டி.வி.தினகரன், சீமான், பிரேமலதா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டது.

அவற்றில் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதால் பல இடங்களில் பிரச்னை ஏற்பட்டது. நேற்று இரவு 10 மணி நிலவரப்படி 2029 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

இன்றும், நாளையும் வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். நாளை மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வேட்புமனு பரிசீலனையின்போது, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் மனு தாக்கல் செய்துள்ள அமைச்சர் வேலுமணியின் மனைவி, குடும்பத் தலைவி என்று வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவருக்கு பல கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்தலைவிக்கு எப்படி வருமானம் வந்தது. அவருக்கு பல கோடி ரூபாய் வருமானம் வந்ததாகச் சேர்த்துள்ளனர். அது எப்படி வந்தது என்பதைச் சொல்லவில்லை என்று கூறி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தேர்தல் அதிகாரியிடம் எதிர்ப்புத் தெரிவித்தார்.இதற்கு அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வேட்பு மனுக்களை பரிசீலனை செய்த பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Leave a Response