18 ஆவது மக்களவைத் தேர்தல் – தமிழ்நாட்டில் நான்குமுனைப் போட்டி

18 ஆவது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுவை ஆகியனவற்றில் 40 தொகுதிகளுக்கும் முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் நான்குமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், திமுக (21 தொகுதிகள்) காங்கிரசு(10), மார்க்சிஸ்ட்(2), இந்திய கம்யூனிஸ்ட்(2), மதிமுக(1), விசிக(2), கொமதேக(1), இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(1) ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

அதிமுக தலைமையிலான கூட்டணியில்,அதிமுக 33, தேமுதிக 5, எஸ்டிபிஐ 1, புதிய தமிழகம் 1 ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

பாஜக தலைமையிலான கூட்டணியில், பாஜக 20, பாமக 10, தமாகா 3, அமமுக 2,ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு 1, புதிய நீதிக்கட்சி 1, ஐஜேகே 1, தமமுக 1, இந்திய மக்கள் கல்விக்கழகம் 1 ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

இவை தவிர நாம் தமிழர் கட்சியினர் தனியாக 40 தொகுதிகளிலும் களம் காண்கின்றனர்.

அனைத்து அணிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.இதனால் தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

Leave a Response