சனவரியில் சசிகலா விடுதலை – சிறைத்துறை தகவல்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனைக் காலம் முடியும் 2021 ஆம் ஆண்டுக்கு முன்பாகவே நன்னடத்தை விதியின் கீழ் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என கூறப்பட்டது.

கடந்த சில வாரங்களாகவே சசிகலா விடுதலை குறித்து பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வருகிற ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை ஆவார் என்று பெங்களூர் சிறைத்துறை தகவல் அளித்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி, சசிகலா விடுதலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டு இருந்தார்.நரசிம்மமூர்த்திக்கு அனுப்பியுள்ள பதிலில் சசிகலா ஜனவரியில் விடுதலையாவதாக சிறைத்துறை தகவல் அளித்துள்ளது.

Leave a Response