பிரதமர் அலுவலகத்தில் அமுதா ஐஏஎஸ் – குறிவைக்கப்படுகிறதா தமிழகம்?

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அமுதா, 1994 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ந்தவர்.

இவர் தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பைப் பெற்றவர், அமுதா ஐ.ஏ.எஸ். தனது சிவில் சர்வீஸ் பணியில் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகப் பணியாற்றியுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சர் கலைஞர் ஆகிய மூவரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை விரைவாகவும் பொறுப்பாகவும் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை தற்போது பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக்கியிருப்பது,தமிழகத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் பாஜகவின் முயற்சியின் வெளிப்பாடு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Response