ஜோதிகா படம் பற்றிய ட்வீட்டால் சர்ச்சை – உடனே நீக்கிய பாரதிராஜா

ஜே ஜே ப்ரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் திரையரங்குக்கு வராமல் ஓடிடி எனப்படும் இணைய தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது.

இன்று இந்தப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெளிவருமுன்பே இப்படத்தைப் பிரத்யேகமாகப் பார்த்த பிரபல இயக்குநர்கள் அப்படம் பற்றிப் பாராட்டிப் பேசியிருக்கிறார்கள்.

படத்தைப் பார்த்த இயக்குநர் பாரதிராஜா, தமிழ்நாட்டில் கொரோனா வந்து பசியால் வாடும் மக்களைப் பார்த்துக்கூட ஒரு நாளும் என் கண்கள் கலங்கவில்லை. ஆனால், ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் பார்த்து என் கண்கள் கலங்கிவிட்டது.உடனே நான் ஜோதிகாவைக் கட்டிப்பிடித்து அழுதுவிட்டேன்

என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு, பசியால் வாடும் மக்களைப் பார்த்து வராத கண்ணீர் ஒரு நடிகையின் நடிப்பைப் பார்த்து வந்துவிட்டதா? என எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வரத்தொடங்கின. அதனால் அதை நீக்கிவிட்டார்.

அதன்பின்,
அறியாத வயதில் காமத்தை சுமந்து,வெளியில் சொல்லா முடியாமல் வாழும்,பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல,பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம். இயக்குநரின் இயக்கமும்,ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள் கண்களைக் கலங்கடித்து விட்டது. இந்த “பொன்மகள் வந்தாள்” கண்டிப்பாக சமூகத்தைக் கலங்கடிக்கும்.

என்று பதிவிட்டிருக்கிறார்.

Leave a Response