
பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது….
50 வருட அரசியல் அனுபவம் உள்ள செங்கோட்டையன் மஞ்சள் கலரில் துண்டு போர்த்தியுள்ளார். கடந்த ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் இருந்த செங்கோட்டையன் தற்போது நல்லாட்சி இல்லை எனக் கூறுவது வருத்தமான செய்தி.அமைச்சராகவும், எம்எல்ஏவாகவும் பல்வேறு துறைகளை வழி நடத்தியவர்.மோசமான ஆட்சி என்று கூறுவதை படித்தவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பதை சிந்திக்க மறந்துவிட்டார். திருநாவுக்கரசர் செங்கோட்டையனைச் சந்தித்திருப்பது இங்கிருந்து அங்கு சென்ற செங்கோட்டையன் அங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் போவார் என்பதைக் காட்டுகிறது. எங்கு போவார் என்பதைச் சொல்லமுடியாது.
எந்த தனி நபரையும் வைத்து எந்தக் கட்சியும் இல்லை.என்னை வைத்தும் பாஜக இல்லை. எனது கணிப்பு சரியாக இருந்தால் 2026 ஏப்ரல் 10 ஆம் தேதி தேர்தல் நடக்கும்.
அதற்கு இன்னும் 100 நாட்கள் உள்ளன. தேர்தலுக்கு முந்தைய நாள் கூட நிறைய மாறுதல்கள் வரும். அரசியலில் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் காற்று அடிக்கும். மக்கள் சக்தி ஓங்கி தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும்
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கெனவே தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டிய தேர்தல் அறிவிப்பை நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


