சிங்கள இராணுவம் காவல்துறை அச்சுறுத்தலை மீறி நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மே 18, 2009 ஆம் நாள் தமிழீழத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அத்துடன் போர் முடிவுக்கு வந்தது.

ஆண்டுதோறும் அந்த நாளையொட்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அந்நாட்களில் மறைந்த மக்களுக்காக ஒளீயேற்றி வணங்குவர்.

இவ்வாண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல்நாள் நினைவேந்தல் நேற்று (மே 13) யாழ்ப்பாணம் செம்மணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவு கூறப்பட்டது.

சிங்களக் காவல்துறை மற்றும் இராணுவத்தினர், இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று அச்சுறுத்தியுள்ளனர். ஆனால் அதற்கு மத்தியிலும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

அதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், சட்ட ஆலோசகர் சட்டத்தரணி காண்டீபன், மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகரன், யாழ் மாநகர சபை உறுப்பினர் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Response