வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட ரஜினி – வறுத்தெடுக்கும் மக்கள்

பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடெங்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பேரெழுச்சியாகத் திரண்டு போராடிவரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த், டிவிட்டரில் 19-12-2019 இரவு 11 மணியளவில் தன் கருத்தை வெளியிட்டார். அதில்,

எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வுகாண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

அதற்கு உடனடியாகக் கடும் கண்டனங்கள் எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன.

அவற்றில் சில….

ஹெச்.ராஜாவை விட ஆபத்தான ஜந்து ஒன்று இருக்கிறது என்றால், அது பாஜகவுக்கு கூஜா தூக்கும் இந்த ‘ராஜாதி ராஜா’தான்!

திரைப்பட தொழிலாளர் விழாவில் அரசியல் பேசிய அஜித்துக்கு எழுந்து நின்று கை தட்டின
லதா புருசா …..
குடியுரிமை சட்டம் பற்றி கேட்டால் . ?
இது சினிமா நிகழ்ச்சி , இதில் அரசியல் வேண்டாம்.
என்ன ரஜினி உன் தர்பார் …?

இந்த தமிழர் விரோதி .ரஜினிகாந்த் தமிழகத்தில் வாழ தகுதியற்றவன்.

கமலகாசனைவிடக் குறைவாகத்தான் வாக்குகள் பெறுவார்.

முதுகெலும்பில்லா லூசுக்கூமுட்டை. மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாய் அடிக்கும்போது ஏன் என கேட்க தைரியமில்லா அற்பப்புழு..இப்ப வந்துருச்சு தேசப்பாதுகாப்பு கேசப்பாதுகாப்புன்னு..

இவை போல இன்னும் ஏராளமான விமர்சனங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.

Leave a Response