ரஜினி மீது நம்பிக்கையிழந்த இரசிகர்கள் – நடிகர் நட்டி ட்வீட்டால் வெளிப்பட்டது

ரஜினி மக்கள் மன்றத்தின் 38 மாவட்டச் செயலாளர்களுக்கும் நடிகர் ரஜினிகாந்த் சார்பில் வரும் திங்கள் கிழமை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டப்த்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக்ச் செய்திகள் வெளியாகியுள்ளது.

அரசியல் கட்சி தொடங்கும் முடிவைக் கைவிட்ட பிறகு நடிகர் ரஜினிகாந்த் மாவட்டச் செயலாளர்களுடனான சந்திப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் மக்கள் மன்றத்தின் அடுத்த கட்ட செயல்பாடு தொடர்பாக பேசப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் பலர் அமைப்பிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகிய பிறகு சந்திக்கக்கூடிய முதல் ஆலோசனைக் கூட்டம் என்பதால் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி வெளீயிட்டுள்ள ட்விட்டர் பதிவில்….
12ம் தேதி பலருக்கு மனம் மகிழ் நாள்..நம்பினோர் கைவிடப்படார் நான்கு மறை தீர்ப்பு….என்று சொல்லியிருக்கிறார்.

இதில் கருத்துச் சொல்லியிருக்கும் பலரும் எதிர்மறையாகவே பேசிவருகிறார்கள்.

நம்புன வரைக்கும் போதும் தலைவா செலவு பண்ண பணம் இல்லை என்றும்

நீங்க பாட்டுக்கு சும்மா ஏதாவது சொல்லுங்க..தேர்தலே முடிஞ்சு போச்சு. ஒன்னும் செய்ய முடியாது. அவங்க குடும்ப திரைப்படத்திற்காக விளம்பரம் செய்வார்…போங்க சார்

என்றும் கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன.

ரஜினி மீது அவருடைய இரசிகர்கள் நம்பிக்கை இழந்திருப்பதையே இவை காட்டுகின்றன என்கிறார்கள்.

Leave a Response