கடைசி நேரத்தில் தமிழக விவசாயிகள் அதிரடி – கதி கலங்கும் மோடி

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் மோடிக்கு எதிராக, தமிழகத்தில் இருந்து 40 விவசாயிகள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தமிழ்நாடு விவசாயி சங்கங்களின் தலைவர் தெய்வசிகாமணி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், மோடிக்கு எதிராகப் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மோடி ஆட்சியில் விவசாயிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட விவசாய விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும், அவர் மீண்டும் பிரதமரானால் நாடு மற்றும் விவசாயிகளுக்கு ஆபத்து என்ற அடிப்படையிலேயே, அவரை எதிர்த்து தாங்கள் போட்டியிடுவதாகவும் தெய்வசிகாமணி தெரிவித்தார்.

நரேந்திர மோடியை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில்,அய்யாக்கண்ணு உள்பட தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிட இருப்பதாக அறிவித்தார்கள்.

ஆனால் அவர்களை அமித்ஷா சந்தித்ததைத் தொடர்ந்து பின்வாங்கினார்கள்.

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ள கடைசி நேரத்தில் தமிழகத்திலிருந்து இப்படி ஒரு அறிவிப்பு. இதனால் பாஜகவினரும் மோடியும் கதிகலங்கிப் போயிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response