தி மு க முன்னாள் எம். பி திடீர் மரணம்

திமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி (56) தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்ரல் 27) இரவு 11 மணி அளவில் காலமானார்.

கடந்த 16 ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் கருப்பை அகற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பிய அவருக்கு
நோய்தொத்ற்று மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதால் மீண்டும் கடந்த 24 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு இயற்கை எய்தினார்.

தேவகோட்டையில் பிறந்த வசந்தி ஸ்டான்லி தி.மு.க சார்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரை ராஜ்யசபா உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.

அவரது உடல் இன்று காலை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலணியில் உள்ள அவரது இல்லத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது,

தொடர்ந்து, நாளை பாளையம்கோட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு உடல் எடுத்து செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.

இவருடைய திடீர் மறைவு தி மு க தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response