இரண்டாவது வேட்பாளர் பட்டியல் – ஏமாற்றினார் டிடிவி.தினகரன்

2019 மக்களவைத் தேர்தலில் டிடிவி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் மட்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.

இந்தக் கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதற்கட்டமாக 24 பாராளுமன்றத் தொகுதிகளில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் 18 சட்ட மன்றத் தொகுதிகளில் 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டிருந்தது அக்கட்சி.

இந்நிலையில் இன்று (மார்ச் 22,2019) காலை 10 மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதன்படி,

1.வடசென்னை- சந்தான கிருஷ்ணன்
2.அரக்கோணம் – பார்த்திபன்
3.வேலூர் – பாண்டுரங்கன்
4.கிருஷ்ணகிரி – கணேசகுமார்
5.தர்மபுரி – பி.பழனியப்பன் (முன்னாள் அமைச்சர்)
6.திருவண்ணாமலை – ஏ.ஞானசேகர்
7.ஆரணி – ஜி.செந்தமிழன் (முன்னாள் அமைச்சர்)
8.கள்ளக்குறிச்சி – கோமுகிமணியன்
9.திண்டுக்கல் – ஜோதிமுருகன்

10.கடலூர் – கே.ஆர்.கார்த்திக்
11.தேனி – தங்க தமிழ்ச்செல்வன்
12.விருதுநகர் – பரமசிவ ஜயப்பன்
13.தூத்துக்குடி – டாக்டர் புவனேஸ்வரன்
14.கன்னியாகுமரி – லட்சுமணன்

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டது.

அதன்படி,

1.சோளிங்கர் – டி.ஜி.மணி
2.பாப்பிரெட்டிபட்டி – ராஜேந்திரன்
3.நிலக்கோட்டை – தங்கதுரை
4.திருவாரூர் – எஸ்.காமராஜ்

5.தஞ்சாவூர் – ரெங்கசாமி
6.ஆண்டிப்பட்டி – ஜெயக்குமார்
7.பெரியகுளம் – கே.கதிர்காமு
8.விளாத்திகுளம் – ஜோதிமணி
9.புதுச்சேரி (தட்டஞ்சாவடி) – ந.முருகசாமி

இப்பட்டியலை டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.

இவற்றில் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு எதிராக தங்கதமிழ்ச்செல்வன் போட்டியிடுவதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. இத்தொகுதியில் டிடிவி.தினகரனே போட்டியிடுவார் என்கிற எதிர்பார்ர்பு இருந்தது. அப்படி எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Leave a Response