அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம் – டிடிவி காரணமா?

2019 மக்களவைத் தேர்தலையொட்டி, மார்ச் 17,2019 காலை அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டிலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வெளியிட்டார்.அவற்றில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இடைத்தேர்தல் நடக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மார்ச் 17 இரவு பத்துமணியளவில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் எம்.முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (மார்ச் 22,2019) காலை பத்து மணியளவில்,

பெரியகுளம் கழக வேட்பாளர் முருகன் மாற்றம். அவருக்கு பதிலாக மயில்வேல் வேட்பாளராக அறிவிப்பு என்று அதிமுக அறிவித்துள்ளது.

முன்னதாக இன்று காலை எட்டுமணியளவில் டிடிவி.தினக்ரன் கட்சி சார்பாக பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் கே.கதிர்காமு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்காரணமாகவே அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்.

Leave a Response