11 நாட்களில் 35 கோரிக்கைகள் – சத்யபாமா எம்பியின் பாராளுமன்ற செயல்பாடுகள்

2018 டிசம்பர் மாதம் வெளியான பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையில், தமிழ்நாட்டின் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 37 பாராளுமன்ற உறுப்பினர்களில் திருப்பூர் தொகுதி உறுப்பினர் வி.சத்யபாமா 87 விழுக்காடு நாட்கள் வருகை தந்து முதலிடம் பிடித்துள்ளார். 119 விவாதங்களில் பங்கேற்று 412 கேள்விகள் எழுப்பியுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.

இவ்வாண்டு தொடக்கத்திலும் அவருடைய செயல்பாடு பாராட்டுக்குரியதாக அமைந்திருக்கிறது.

30.01.2019 – 13.02.2019 வரையிலான கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின் செயல்பாடுகளின் விவரம் வெளியாகியுள்ளது.

அவை…

கைத்தறித் துறை பற்றி…

1) பவானி ஜமக்காளம் – கைத்தறி தரைவிரிப்புகளுக்கு ஜி.எஸ்.டி வரி முறைமையில் பவானி ஜமக்காளம் உள்ளிட்ட தரைவிரிப்புகளுக்கு 5% சதவிகித வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளித்தல்.

2) அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கும் நெசவாளர் அடையாள அட்டைகளை வழங்கவும் நேரடி மான்யத்தை நேரடியாக வங்கிக்கணக்குகளில் செலுத்தும் DBT திட்டத்தின்கீழ் திட்டப் பயன்களை அவர்கள் அடைய வழிவகை செய்தல்.

விசைத்தறித் துறையின் தேவைகள்…

3) வழக்கமான விசைத்தறித் தொழில் மேம்பாட்டுக்காக கவனம் செலுத்த பிரத்யேகமாக ஒரு துறையை அமைத்தல்.

4)விசைத்தறித் துறை சார்ந்தவர்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி முத்ரா திட்டக் கடன்கள் கிடைக்கத் தேவையான அறிவுறுத்தல்களை வங்கிகளுக்கு அளித்தல்.

திருப்பூர் ஜவுளித்துறையின் தேவைகள்…

5) தொழில்துறைக்கும் அரசுக்கும் இடையே பாலமாக
பின்னலாடைத் துறைக்கான வாரியத்தை அரசு அமைத்தல்.

6) பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12% சத வீதத்தில் இருந்து 5% சதவீதமாகவும், பொது சுத்திகரிப்பு நிலையங்களில் பயன்படுத்தப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 18% சதவீதத்தில் இருந்து 5% சதவீதமாகவும் குறைத்தல்.

7)திருப்பூரின் வளர்ச்சி வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதோடு நாட்டிற்கு அந்நிய செலாவணியையும் ஈட்டித் தரும் வல்லமை உடையது. இந்த இலக்கை அடைவதற்கான கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்.

8)திருப்பூரில் உள்ள ஜவுளித்துறை மையங்களில் தொழிலாளர்களின் திறன்மேம்பாட்டை உறுதி செய்தல்.

9)திருப்பூருக்கு குடிபெயர்ந்து வரும் தொழிலாளர்கள் வசதியாக தங்குவதற்காக ஒரு லட்சம் வீடுகளைக் கட்டித்தருதல்.

10)பின்னலாடைத் துறை வெகு வேகமான வளர்ச்சி பெற்று வரும் துறையாகும். திருப்பூர் பின்னலாடை மைய விரிவாக்கத்துக்கு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான ஆதரவு அளித்தல்

11) திருப்பூரில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் இறக்குமதி செய்கின்றனர். எனவே முன்கூட்டியே அனுமதி பெறும் EPCG திட்டத்தின் கீழ் இறக்குமதித் தீர்வை விவரங்களை சமர்ப்பிக்கும் ஏற்றுமதியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகையை திரும்பப் பெறுவதற்கான கிளெய்ம்களை மேற்கொள்ள அனுமதி அளித்தல்.

EGM விவரங்களை ஏற்றுமதி யூனிட்டுகள் தற்போது மேனுவலாக தாக்கல் செய்துவருகின்றன. ஜிஎஸ்டி தொகையை எளிதாகத் திரும்பப்பெறும் வகையில் இதனை ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யும் வசதியை உருவாக்குதல்

12) ஏழை ஊழியர்களுக்கு சேவை புரியவும், சமூகத்தின் நல்லிணக்கத்தை கொண்டுவரவும் இந்த திருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகத்தை மண்டல அலுவலகமாக தரம் உயர்த்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

ரயில்வேதுறையின் தேவைகள்….

13)திருப்பூர் ரயில் நிலையத்தில் முழுமையாக கூரை வேயப்பட்ட கூடுதல் நடைமேடை அமைத்தல்

14)திருப்பூர் ரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் புக்கிங் கவுண்ட்டர் அமைத்தல்.

15)திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில் வண்டியின் பெட்டிகள் வருவது மற்றும் புறப்பட்டுச் செல்வது பற்றிய டிஜிட்டல் எல்.இ.டி தகவல் போர்ட் சேவை.

16)திருப்பூர் ரயில் நிலையத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக பேட்டரியால் இயங்கும் வண்டி வசதி.

17)திருப்பூர் ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைத்தல்.

18)திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில் வண்டி பற்றிய தகவல்களுக்கான கியொஸ்க் மைய வசதி.

19)திருப்பூர் ரயில் நிலையத்தில் ரொக்கப்பண ஏடிஎம் வசதி.

20)திருப்பூர் ரயில் நிலையத்தில் குடிநீர் வழங்கும் சாதனங்கள் போன்ற பல வசதிகளுடன் திருப்பூர் ரயில் நிலையத்தை நவீனமயமாக்குதல்.

மருத்துவத் துறையின் தேவைகள்…..

21) திருப்பூரில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமையும் பட்சத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ‫கொங்கு மண்டல மக்களுக்கு மிகச்சிறந்த மருத்துவ வசதிகளையும் சேவைகளையும் பெறுவார்கள் மருத்துவ பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்த நடவடிக்கை உதவும்‫.

22)திருப்பூரில் பேச்சு மற்றும் செவிப்புலன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்காக கல்லூரி ஒன்றை தொடங்குதல்.

23) மக்களுக்கான மருந்து வழங்கும் திட்டம் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்த அம்மா மருந்தகம் திட்டத்தை ஒத்தது.

24)ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மாநில செயல்பாட்டில் உள்ள சுகாதாரத் திட்டங்களுடன் இணைக்கப்படவேண்டும். ஆனால் இந்தத் திட்டத்தை மாநில செயல்பாட்டில் உள்ள சுகாதார திட்டங்களுடன் இணைத்தல்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கேந்திரிய வித்யாலயா….

25)திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் (கோபிச்செட்டிப்பாளையம், அந்தியூர், பவானி, பெருந்துறை) ஒரு கேந்திரிய வித்யாலயா நிறுவுதல்.

லஷ்மி நகர் முதல் செங்கப்பள்ளி வரை சாலை மற்றும் மேம்பாலம்….

26) திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் லஷ்மி நகர் முதல் செங்கப்பள்ளி வரை அமைந்துள்ள NHAI- 47 இல் இணைப்பு சாலை மற்றும் மேம்பாலம் அமைத்தல்.

27) மடியும் நொடியும்,கொடியை நிமிர்த்திய சுதந்திரப் போராட்டத் தியாகி மாவீரன் திருப்பூர் குமரன் ‘கொடி காத்த குமரன்’ அவர்களின் பெயரை திருப்பூர் ரயில் நிலையத்திற்கு சூட்டுதல்

28) நாட்டில் பெண் தலைவர்களில் பெருமைமிகு பங்களிப்பையும் சாதனைகளையும் புரிந்த எங்கள் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு பாரதரத்னா விருது வழங்கி இந்திய அரசு சிறப்பித்தல்.

29) கடந்த 5 ஆண்டுகளில் புயல் வெள்ளம் மற்றும் பெருமழை காரணமாக தமிழ்நாட்டில் விவசாயிகள் பட்ட இன்னல்கள் பற்றி குடியரசுத் தலைவர் தனது உரையில் எதையும் குறிப்பிடவில்லை எனபது வருத்தமளிக்கிறது.

30) தமிழ்நாட்டில் வாழும் மீனவர்களின் பிரச்சனைகள் குறித்தும் அவற்றுக்கு தீர்வு காண்பது குறித்தும் குடியரசுத் தலைவர் உரையில் எதுவும் இடம்பெறவில்லை.

31) கடந்த 5 ஆண்டுகளில் #வெள்ளம் மற்றும் இயற்கைப்பேரிடர் காரணமாக தமிழ்நாட்டில் வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடுகளைக் கட்டித் தரும் வகையில் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி உதவியை வழங்குதல்.

32)குடியரசுத் தலைவர் தமது உரையில் நதிகள் இணைப்புப் பற்றி குறிப்பிடாதது துரதிருஷ்டவசமானது. குறிப்பாக தீவகற்ப நதிகளை இணைப்பது பற்றிக் குறிப்பிடவில்லை. தீவகற்ப நதிகளின் இணைப்பு மூலமாகத் தான் தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பகிர்வு மற்றும் பாசன நீர் நெருக்கடி குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

33) உஜ்வாலா திட்டத்தின் கீழ் 6 கோடி பேருக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கிய திட்டம் இன்னும் விரிவாக்கப்படுதல்

34) ஜன் தன் திட்டத்தின் கீழ் 34 கோடி பேர் புதிதாக வங்கிக் கணக்குகளைத் திறந்துள்ளார்கள் ஆனால் குறைந்தபட்சக் கையிருப்பை வங்கிகளில் வைத்திருக்காத காரணத்துக்காக ஏழை மக்களுக்கு வங்கிகள் அபராதம் விதிக்கக் கூடாது என்று மத்திய அரசு வங்கிகளுக்கு அறிவுறுத்தல்.

35) வங்கிக் கணக்குகளில் நேரடியாக மான்ய உதவிகளைச் செலுத்துவதும் அவர்களுக்கு பயனைக் கொடுத்துவருகிறது. ஆனால் இவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தும் மாநிலங்கள் ஊக்கம் பெறவேண்டும். மாறாக தமிழ்நாட்டுக்கு வழங்கப்படவேண்டிய மத்திய நிதி உதவி உரிய முறையில் வழங்கப்படாமல் தமிழகம் தண்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் சாதனைகளை எட்டும் வகையில் தமிழ்நாடு போன்ற சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடுகளை மத்திய அரசு செய்யவேண்டும்.

இவ்வளவு செய்திகளைப் பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார் சத்யபாமா.

11 நாட்கள் நடந்த கூட்டத்தொடரில் திருப்பூர் தொகுதி சார்ந்த சிக்கல்கள் மாநில உரிமைகள் சார்ந்த கோரிக்கைகள் இந்திய அளவிலான கோரிக்கைகள் என எல்லா விசயங்களையும் பற்றிப் பேசியிருக்கிறார்.

இதனால் பாராளுமன்றத்தின் உள்ளும் புறமும் அவரைப் பலரும் பாராட்டிப் பேசி வருகின்றனர்.

Leave a Response