நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கை

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

இந்நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் 32 மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பிறகு ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில்….

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை.தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் எங்களது இலக்கு. நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது.அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ, மன்றத்தின் கொடியோ எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ பிரச்சாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது.

தமிழகத்தின் முக்கிய பிரச்சினை தண்ணீர்.வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையை நிரந்தரமாகத் தீர்க்கக்கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாகச் செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கு நீங்கள் சித்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Leave a Response