சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று கூறியதாவது:-

தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் (இன்று) கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யும்.

கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்து வரும் 3 நாட்களுக்கு (6-ந் தேதி வரை) தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

மீனவர்கள் தென்மேற்கு வங்க கடல் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை (இன்று) செல்ல வேண்டாம். சென்னையைப் பொறுத்தவரையில், இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

ஆனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்துகொண்டிருக்கிறது.
இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி நிற்கிறது.

Leave a Response