ஐஸ்வர்யா யாஷிகா ஆகிய இருவரில் காயத்ரிரகுராம் ஆதரவு யாருக்கு?

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில், ஜனனி, ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், பாலாஜி, ரித்விகா, அனந்த் வைத்யநாதன், மமதி சாரி, நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, பொன்னம்பலம், சென்றாயன், டேனியல், மஹத், வைஷ்ணவி, மும்தாஜ், ஷாரிக் ஹாசன் ஆகியோர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். இடையில், விஜயலட்சுமியும் புதிய போட்டியாளராக ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் சென்றுள்ளார்.

அனந்த் வைத்யநாதன், மமதி சாரி, நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, பொன்னம்பலம், சென்றாயன், டேனியல், மஹத், வைஷ்ணவி, மும்தாஜ், ஷாரிக் ஹாசன் ஆகியோர் போட்டியில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், ஜனனி, ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், பாலாஜி, ரித்விகா, விஜயலட்சுமி ஆகிய 6 பேரும் போட்டியாளர்களாகக் களத்தில் உள்ளனர்.

இவர்களில் யாஷிகாவுக்கும் ஐஸ்வர்யாதத்தாவுக்கும் இடையேதான் கடும்போட்டி என்று பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.

இந்நிலையில் இவ்விருவரும் உறுதியானவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். இவர்களிருவரில் யாரையும் நான் ஆதரிக்கவில்லை என்று பிக்பாஸ் 1 புகழ் காயத்ரிரகுராம் கூறியுள்ளார்.

Leave a Response