நானும் சொல்கிறேன் பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக – மு.க.ஸ்டாலின் அதிரடி

செப்டம்பர் 3 அன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்குச் சென்றார் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

அதே விமானத்தில் அவருடன் பயணித்த தூத்துக்குடியைச் சேர்ந்த கனடாவில் படிக்கும் ஆராய்ச்சி மாணவியான சோபியா விமானத்தில் வைத்தே `பாசிச பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக’ என்று கைகளை உயர்த்தி முழக்கம் எழுப்பினார். மேலும், தூத்துக்குடி விமான நிலையம் வந்தவுடனும் மீண்டும் தமிழிசையைப் பார்த்து முழக்கம் எழுப்பியுள்ளார். இதுகுறித்து தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கைது நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து கருத்து பதிவிட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்,

ஜனநாயக விரோத – கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். அப்படிச் சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள். நானும் சொல்கின்றேன்! `பா.ஜ.க-வின் பாசிச ஆட்சி ஒழிக!

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவைத் தொடர்ந்து பாசிச பாஜக ஒழிக, பாசிச பாஜக ஆட்சி ஒழிக ஆகிய சொற்கள் இந்திய அளவில் டிரெண்டாகி வருகின்றன. இதனால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.

Leave a Response