சத்யபாமா எம் பி யின் தொடர் முயற்சி நெசவுத் தொழிலுக்கு மறுமலர்ச்சி

திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்பூர்,ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கைத்தறி, விசைத்தறி நெசவு அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது மிகவும் நலிந்த நிலையில் இருக்கும் அத்தொழிலைப் பாதுகாக்கக் கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் திருப்பூர் தொகுதி எம்.பி. சத்தியபாமா நேரில் கடிதம் அளித்தார்.

அக்கடிதத்தில் குறிப்பிட்ட கோரிக்கைகள்:

*ஈரோட்டைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் 7000 பேரை தகுதியான தொழில் முனைவாளர் பட்டியலில் சேர்த்தல்.

*கைத்தறி நெசவாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்.

*நெசவாளர்களுக்கு திட்டப் பயன்களை நேரடியாக அவரவர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் திட்டத்தை நிறைவேற்றல்.

அமைச்சரிடம் இக்கோரிக்கைக் கடிதம் அளித்ததோடு நில்லாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடும் தொடர்ந்து பேசிய சத்தியபாமாவின் தொடர் முயற்சியின் விளைவாக,
குறிப்பிட்ட அனைத்துக் கோரிக்கைகளும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக ஸ்மிருதி இராணி பதில் கடிதம் அளித்துள்ளாராம்.

அழிந்து வரும் கைத்தறித் தொழிலையும், நெசவாளர்களையும் பாதுகாக்க வேண்டி சத்தியபாமா எடுத்த இம்முயற்சி நெசவாளர்களிடையே மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response