கடவுள் பற்றி கமல் கருத்தில் மாற்றம் ஏன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில்,செப்டம்பர் 1 அன்று கமல் பேசினார். அப்போது, ‘பிக்பாஸ் வீட்டில் கடைசி நபராக இருந்து வெற்றிபெறுபவருக்கான தகுதி, இவருக்கு இல்லவே இல்லை என்று யாரைச் சொல்வீர்கள் என்று கேட்டார். அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைப் பற்றி சொன்னார்கள்.

நாங்க எல்லாரும் 75 நாளுக்கும் மேல, இங்கே இருக்கிறோம். ஆனால்விஜயலட்சுமி வைல்டு கார்டு மூலம் இப்பதான் வந்தாங்க. அவங்களுக்கு அதனால தகுதி இல்லன்னு நினைக்கிறோம் என்று யாஷிகா சொன்னார். அதேபோல் ஐஸ்வர்யாவும் இதையே சொன்னார்.

அப்போது வரிசையாக சொல்லிக்கொண்டிருக்கும் போது, ஜனனியும் ரித்விகாவும், ஐஸ்வர்யா இதுவரை நாமினேட் செய்யப்படவே இல்லை. நாமினேட் செய்யப்பட்டிருந்தால், மக்களிடம் ஓட்டு கேட்கும்படி ஆகியிருக்கும். மக்கள் மனதில் ஐஸ்வர்யா இருக்கிறாரா இல்லையா என்பதெல்லாம் தெரிந்திருக்கும். ஆனால் அப்படியொரு நிகழ்வே நடக்கவில்லை. இரண்டு முறை நாமினேட் செய்ய வாய்ப்பு வந்தபோதிலும் யாஷிகாவால் காப்பாற்றப்பட்டார் என்று சொன்னார்கள்.

உடனே ஐஸ்வர்யா, கடவுள் காப்பாற்றினார் என்று சொன்னார். அதைக் கேட்டு ரித்விகாவும் ஜனனியும், ‘கடவுள் காப்பாத்தலை சார். அவங்க ஃப்ரெண்ட் யாஷிகாதான் காப்பாத்துனாங்க’ என்று சொன்னார்கள்.
அப்போது ஐஸ்வர்யா, ‘கடவுள் யாஷிகா ரூபத்தில் வந்து காப்பாற்றினார்’ என்று சொல்ல, உடனே கமல், ‘கடவுள் எல்லா உருவங்களிலும் வருவார்’ என்று சொல்ல, அதற்கும் கைதட்டி ரசித்துச் சிரித்தார்கள் பிக்பாஸ் நேயர்கள்.

நான் நாத்திகன் பகுத்தறிவாளன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த கமல், கடவுள் காப்பாற்றவில்லை என்று சொல்வதே தப்பு என்கிறார்.

ஆத்திகர்களிடம் வாங்கிய அடி பலமோ?

Leave a Response