தமிழகத்தில் ரஜினியுடன் கூட்டணி ? – மோடியின் பதிலால் பரபரப்பு

தினத்தந்தி நாளேடு பிரதமர் மோடியை சிறப்பு நேர்காணல் செய்திருக்கிறது. அதைல் பல்வேறு விசயங்களைப் பேசியிருக்கிற பிரதமர் மோடி, ரஜினிகாந்த் பற்றியும் பேசியுள்ளார்.

அதில்…

கேள்வி:- ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால், அந்த கட்சியோடு பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா?

பதில்:- ‘உங்கள் கேள்வியே தொடங்கினால்’ என்று தொடங்குகிறது. சந்தேகமில்லாமல் ரஜினிகாந்தை அவருடைய சாதனைகளுக்காக நான் மதிக்கிறேன். ஆனால், நிச்சயமாக யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

நேரடிப் பேச்சு, உளவுத்துறை தகவல் ஆகியனவற்றை அறிந்து வைத்திருக்கும் பிரதமர் மோடி, தொடங்கினால் என்பதற்கு அழுத்தம் கொடுத்திருப்பதால் அவர் கூற்றுப்படி ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது சந்தேகம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Response