பெட்ரோல்குண்டு வீசப்பட்டதற்கு டிடிவி.தினகரனின் எதிர்வினை என்ன தெரியுமா?

சென்னை அடையாறு கற்பகம் அவென்யூ பகுதியில் டி.டி.வி. தினகரன் வசித்து வருகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியை நடத்தி வரும் இவர் தனது வீட்டிலேயே நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார். ஜூலை 29 அன்று அவருடைய வீட்டின் முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் மூன்று பேர் காயம் அடைந்தார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகியாக பணியாற்றிய புல்லட் பரிமளம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். கட்சிலியிருந்து நீக்கப்பட்டதில் கோபம் அடைந்த புல்லட் பரிமளம், தன்னுடைய எதிர்ப்பைக் காட்டும் விதமாக டிடிவி தினகரன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தன்னுடைய காரின் மீதே பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. புல்லட் பரிமளத்தின் டிரைவரை காவல்துறை பிடித்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே காரில் இருந்து அரிவாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டு உள்ளது. அதுதொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்நிகழ்வு பற்றி டிடிவி.தினகரனின் கருத்து என்ன? என்பதை விளக்கும் அக்கட்சியின் பிரமுகர் நல்லதுரையின் பதிவு….

இன்று (ஜூலை 29) வேறு சில பணிகளின் ஊடாக அண்ணன் மக்கள் செல்வரை சந்திக்க எண்ணி, அ.ம.மு.க..வின் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் தம்பி.கா.டேவிட் அண்ணாதுரையை நமது தலைமை அலுவலகத்தில் சந்தித்தேன்.

அப்போது தம்பி சொன்னார் ” அண்ணே யாரோ ஒருவர் கட்சி ஒழுங்கு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணன் டி.டி.வி.. வீட்டின் முன் தீக்குளிக்கப் போறானாம் ” வாங்க சீக்கிரம் போவோம் என்றார்.விரைந்து சென்றோம்…

அப்போது தான் அந்த கோர சம்பவம் நடந்து முடிந்திருந்த து….

அண்ணனின் வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டுவது மட்டும் என் வேலையில்லை. ஆபத்து வரும் போது அதைத் தடுப்பதும், அதிலிருந்து காப்பதும் என் வேலைதான் ஓட்டுநர் பாண்டியனும், ……….

ஒற்றை உருவமாக இருக்கும் அண்ணன் பல கோணங்களில் படமெடுத்து உலகுக்கு அறிமுகம் செய்து கொண்டிருக்கும் டார்வினும் ” அந்த பாதக” திட்டத்தை முறியடிக்க , முயற்சித்து … தீக்காயங்களுடன் மருத்துவமனையில்…

வீட்டிற்குள் சென்று அண்ணனை நான் விசாரிக்கும் முன்பு ” அந்த சூழ்நிலையிலும், என்னை விசாரிக்க அவர் மறக்கவில்லை”.
பின்னர் அந்த வீடியோ காட்சிகளை எல்லாம் பார்த்துவிட்டு , தொலைக்காட்சி பேட்டி கொடுத்துவிட்டு, அவர் ரொம்பவும் கஷுவலாக, அந்தாளு ஒரு புரியாதவங்க, இல்லாட்டி அப்டி செய்வானா.. என்றார் வழக்கம் போல சிரித்துக் கொண்டு…

அருகில் இருந்தவர்கள் , அவன் பெட்ரோல் குண்டுகளையும், ஆயுதங்களையும் காரில் கொண்டு வந்துள்ளான் என்ற போதும்…..
விடுங்க பாத்துக்கலாம் என்றார் சிரித்துக் கொண்டே….

இடையில் நான்” இதில் மெத்தனம் காட்டாமல் அண்ணனுக்கான பாதுகாப்பை பலப்படுத்தனும், வீட்டில் மட்டுமல்லாது பயணங்களிலும்” என்றேன்….
அதற்கும் ஒரு
பாத்துக்கலாம்…

எத்தனையோ தலைவர்கள்(?) இருக்கிறார்கள்….
இந்நேரம் அனைத்து மீடியாவையும் அழைத்து ” என்னைக் கொல்ல அமெரிக்கா சதி, ஆப்பிரிக்கா சதி…
இந்திய ராணுவமே எனக்கு பாதுகாப்புக்கு வரணும் ” என்றெல்லாம் பேட்டி கொடுப்பார்கள்…

ஆனால் அத்தனைக்கும் சிரித்துக் கொண்டே …
பாத்துக்கலாம், என்று கூலாக சொல்லும் தலைவன்….

இதில் ஆச்சரியம் , இந்த வயதில் எப்படி இவருக்கு இப்படியொரு பக்குவம்….? என்பதே.

Leave a Response