கலைஞரின் மரணத்தை எதிர்பார்ப்பவர் யார்? ஏன்?

கலைஞரின் உயிரற்ற உடலை காண்பதற்கு காத்துக் கிடந்த கழுகுகள் சலித்துப் போய் களைத்து விட்டன.

ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறாய்? எங்கள் மானம் போகிறது…எத்தனை முறை உனக்கு கெடு வைப்பது? உனது சாவுக்கு நாள் குறித்தே எங்கள் வாழ்நாள் நலிந்து கழிந்தது… போ, உன் உயிரைக் கொடுத்துவிட்டுப் போ…என்று கலைஞரின் உயிரை
பிச்சையெடுத்தாவது கவர்ந்து செல்ல இரந்து நிற்கிறார்கள் இன எதிரிகள்.

இது அவர்களுக்கு புதிதல்ல. வாடிக்கையான ஒன்றுதான். மரணப் படுக்கையில் கிடப்பவரின் உயிரை வஞ்சகமாக தானம் கேட்டு பிச்சையெடுத்தாவது பெற்று விடுதல் இவர்களுக்கு கற்பிக்கப்படும் “கர்ண”பரம்பரை கதை, கைவந்த கலை… கண்ணன் காட்டிய வழி!

கலைஞரை மட்டுமல்ல…திராவிடர் இயக்கத் தலைவர்கள் அனைவரையுமே இந்த அக்ரகாரக் கும்பல் இழிவுபடுத்தியே வீழ்த்திட முயன்றது.
அரக்கர் குலத்தில் நிகழும் ஒவ்வொரு மரணமும் அவர்களுக்கு திருவிழா, உற்சவம், கொண்டாட்டம்.

தங்கள் எதிரிகளை நாசமாக்கிட இந்திரனை துணைசெய்ய வேண்டி இவர்கள் வைத்த கையாலாகாத்தனமான ஒப்பாரிகளின் தொகுப்பே வேதமந்திரங்கள்.
தங்களை எதிர்ப்பவர்களின் உயிரைப் பறிக்க விரும்புதலும், இறந்து போனால் அதை கொண்டாடி மகிழ்தலும் இவர்கள் காலங்காலமாக பின்பற்றி வருகிற “புண்யதர்ம”க் கொள்கைகள்.

1919 மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்த கொள்கையில் பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைக் குரலை பதிவு செய்வதற்கு தனது நலிந்த உடல்நிலையிலும் லண்டனுக்கு சென்று வாதாடிய திராவிட லெனின் டி.எம்.நாயர் லண்டின் மாநகரத்தில் மறைவுற்றபோது அவரது உயிரற்ற உடலைக் கூட பார்க்க விரும்பாத தேசபக்த திலகங்கள் இவர்கள்.

அதே மாண்டேகு சீர்திருத்தத்தில் பார்ப்பன நலனை பாதுகாக்க லண்டனில் முகாமிட்டிருந்த இந்திய தேசிய பார்ப்பனத் தலைவர்கள் எவரும்
டி.எம்.நாயரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கவில்லை. இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. பாரதமாதா புத்திரர்களின் இந்த ஒற்றுமை உணர்ச்சியை பார்த்து வியந்து போய்த்தான் வெள்ளைக்காரன் சுதந்திரத்தை கொடுத்துவிட்டு திரும்பி பார்க்காமல் ஓடினான் என்ற வரலாறு உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்(?)

வைக்கம் போராட்டம் வீச்சுடன் நடைபெறும்போது சிறையிலிருந்த பெரியாரை கொல்வதற்கு “ஸத்ரு ஸம்ஹார” யாகம் நடத்திய பண்பாளர்களின் பரம்பரை இது.

இன்று கருணாநிதி இறப்பு தொலைக்காட்சியில் அறிவித்தவுடன் வடை, பாயசத்துடன் வெளுத்துக் கட்டவோம் என்று பட்டினியுடன் பரிதவிக்கிற இவர்களின் பாட்டன்கள்தான் 1948 ஜனவரி 30 காந்தியார் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பே
” வானொலி பக்கத்திலேயே இருங்கள்…ஒரு முக்கியச் செய்தி ஒலிபரப்பாகப் போகிறது. இனிப்புடன் கொண்டாடுங்கள்…” என்று ரகசிய சுற்றறிக்கை விட்டவர்கள். சொன்னபடியே காந்தியின் உயிரைப் பறித்து…இனிப்புகள் பரிமாறி வெடி வெடித்து கொண்டாடி மகிழ்ந்தவர்கள்.

அறிஞர் அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது கிருபானந்தவாரியார் எனும் புராணபிரசங்கி அதிகபிரசங்கித்தனமாக
” மில்லரிடம் தப்பினாலும் கில்லரிடம் தப்பிக்க முடியாது” என்று வாய்நீளம் காட்டினார்.
தோழர்கள் கைநீளம் காட்டக் கண்டு காலடியில் விழுந்த வாரியார் மன்னிப்புக் கடிதத்தை எழுதி நீட்டினார்.

அண்ணா மறைந்தபோது கடலெனத் திரண்டது மக்கள்கூட்டம். உலக சரித்திரத்தில் இடம் பெற்ற அண்ணாவின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து புளகாங்கிதமடைந்த பரந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர் ராஜாஜி. அந்த ராஜகோபாலாச்சாரியார்தான் இவர்கள் போற்றி துதிக்கிற பீஷ்மருக்கு ஒப்பான பிதாமகர்.

இதற்குமுன் ஒருமுறை கலைஞர் உடல்நலிவுற்றபோது “பாவி கருணாநிதி படுத்தினான்…பகவானன்ட வேண்டின்னுட்டேன்…இதோ, கருணாநிதிய பகவான் படுக்கப் போட்டார்…” என்று உள்மன வன்மத்தை வார்த்தையில் கொட்டிய ஊத்தைப் பல் பேர்வழி இவாளுக்கு லோககுரு! இந்த லோக குருக்கள்
ஈ லோகத்தை விட்டு கிளம்பி ஆண்டுகள் கடந்துவிட்டது.

இது பரம்பரை பகை. ஆகவே அவாள் வட்டாரம் கலைஞரின் மரணத்திற்கு ஏங்கி நிற்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

சாவது உலக இயற்கை.
தூங்குவது போல் சாக்காடு என்ற பாவேந்தரின் வரிகளை பயின்றவர்களை உயிரச்சம் உலுக்குவதில்லை.

– விடுதலை அரசு

Leave a Response