முள்ளிவாய்க்கால் நினைவுநாள் – தமிழீழமெங்கும் தீபமேந்தி பயணம்

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூறும் வகையில் தீபமேந்திய ஊர்தி பவனி வல்வெட்டித்துறையில் ஆரம்பமாகிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஊடாக இன்று மாலை மடு தேவாலயத்தை சென்றடைந்த நிலையில் பொது மக்கள் ஊர்தி பவனிக்கு தீபமேந்தி மலரஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் திகதி இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையை வெளிச்சம் போட்டுக் காட்டும் தீப ஊர்திப் பவனி, வல்வெட்டித்துறையில் 15.05.2018 அன்று தொடங்கியது.

இந்நிலையில் சுடரேந்திய வாகனம் மே 17 மாலை மடு வந்த நிலையில் பொது மக்கள் தீபமேந்திய அஞ்சலி செலுத்தியதுடன் தொடர்ந்து மன்னார் சென்றது, நாளை யாழ்ப்பாணம் பிரதான வீதி ஊடாக மல்லாவி, மாங்குளம், ஒட்டுசுட்டான் ஊடாக நாளை முள்ளிவாய்க்கால் முற்றத்தை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை நினைவுக்கூறும் முகமாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் இரத்த தான முகாம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையினை நினைவுகூரும் முகமாக கிழக்குப் பல்கலைக்கழக, கலை காலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நடைபெற்றதுடன், வெள்ளிக்கிழமையும் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Response