ஐபிஎல் – ஐதராபாத்தை வென்றது பெங்களூரு


சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது.

முதலில் தடுமாறிய பெங்களூரு அணி போக போக டிவில்லியர்ஸ் மோயின் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியில் அதிகப்பட்சமாக டிவில்லியர்ஸ் 69 ரன்கள், மோயின் அலி 65 ரன்கள், கிராண்ட்ஹோம் 40 ரன்கள் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய ரஷித்கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அதிகப்பட்சமாக வில்லியம்சன் 81 ரன்கள், மணிஷ் பாண்டே 62 ரன்கள் எடுத்தனர்.

Leave a Response