கர்நாடக கூத்து இந்தியாவே துயரம் கொள்கிறது

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 எம்எல்ஏக்கள் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. அதேசமயம், தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைக்க காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இணைந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரின.

இந்த சூழலில் நேற்று இரவு எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அளூநர் வாஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து, இன்று காலை 9 மணி அளவில் எடியூரப்பா கர்நாடகத்தின் 23-வது முதல்வராக பதவி ஏற்றார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

”கர்நாடகத்தில் உள்ள பாஜகவுக்கு ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்கள் எண்ணிக்கை கிடையாது. ஆனாலும், மத்தியில் ஆளும் பாஜக அதிகாரத்தை நேர்மைக்கு விரோதமாக பயன்படுத்தி, ஆட்சி அமைத்துள்ளது. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் நிகழ்வாகும். இந்த போலித்தனமான வெற்றியை பாஜக தொண்டர்களும், தலைவர்களும் கொண்டாடி வருகின்றனர். ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டதற்கு தேசமே துயரப்பட வேண்டும்.”

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Leave a Response