புனித ரமலான் இன்று தொடக்கம்

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் உண்ணா நோன்பு இருப்பார்கள். பசியின் வலிமையை உணர்ந்து பசித்தவர்களுக்கு கொடையளிக்கும் இந்த நோன்பு இன்று முதல் தொடங்கும் என்று தமிழகத்தின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் நேற்று அறிவித்தார்.

இதனால் நேற்று இரவு இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்களில் சிறப்பு தராவி தொழுகை நடத்தப்பட்டது.

சஹர்’ எனப்படும் அதிகாலை உணவை 4 மணிக்குள் உண்டுவிட்டு உதயத்துக்கு முன்பே நோன்பைத் தொடங்குவார்கள். நாள் முழுவதும் எச்சில் கூட விழுங்காமல் நோன்பிருந்து மாலை 6 மணிக்கு தொழுகையை முடித்த பிறகு 6.45 மணிக்கு நோன்பை முடித்துக்கொள்வார்கள். நோன்பு முடிப்பதற்கு ‘இப்தார்’ என்று பெயர்.

30 நாளும் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகையும், மாலை நோன்புக்கஞ்சி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தலைமை காஜி தெரிவித்துள்ளார். ஜூன் 15-ம் தேதி வரை நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.

இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ரம்ஜான் மாத நோன்பும் முக்கியமானது. 30 நாளும் நோன்பிருந்து சேமித்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு ரம்ஜான் தினத்துக்கு முன்பு கொடையளிப்பார்கள். இதனாலே இந்த ரம்ஜான் ஈகைத் திருவிழா என்று போற்றப்படுகிறது.

Leave a Response