ரஜினிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கடலூரைச் சேர்ந்த பிரதீப் என்ற பெயரில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மோப்பநாய்கள் உதவியுடன் சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் அது புரளி என தெரியவந்துள்ளது.

மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்-அமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விட்டுள்ளனர். முதல்வர் பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரே ரஜினி வீட்டிற்கும் மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இது எதற்காக என்பது சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்து விசாரித்தால்தான் தெரியவரும் என்கிறார்கள்.

Leave a Response