ஐபிஎல் – டெல்லியைச் சிதறடித்த சன்ரைசர்ஸ்


ஐதராபாத்தில் நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 36-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி-டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி அணி தனக்கு ஒதுக்கப்பட்ட 20 ஓவா்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் சோ்த்தது. இதில் டெல்லி அணியில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 65(36) ரன்களும் ,பின்னா் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 44(36) ரன்களும் எடுத்திருந்தனா். ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக ரஷித் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின்னா் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முணைப்புடன் களம் கண்டது ஐதராபாத் அணி.

ஐதராபாத் அணியின் அதிரடி ஆட்டகாரா்களான ஷிகர் தவானும், அலெக்ஸ் ஹேல்சும் முதலில் களம் கண்டனா். இருவரும் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். பின்னர் இருவரும் டெல்லி அணியின் பந்துகளை பவுண்டரிகளாக மாற்றினர். இதன் பின்னா் சிறப்பாக விளையாடி வந்த அலெக்ஸ் 45 (31 பந்துகள்) ஆட்டமிழந்தார்.

வெற்றிக்கனியைப் பறிக்க டெல்லி அணியின் பந்து வீச்சாளா்கள் பந்துகளை வேகமாகவும் தந்திரமாகவும் வீசினா். இவா்களுக்கு பின்னா் களமிறங்கி கேப்டன் வில்லியம்சனும் பாண்டேவும் அணியின் ரன்களை குறையாமல் இருக்க நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினா்.

பின்னா் கடைசி ஓவா்களில் டெல்லி அணியின் பந்து வீச்சாளா்களை திணறடித்தனா். பின்னா் பிளன்கெட் பந்தில் பாண்டே 21 (17பந்துகள்) ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். இவரை தொடா்ந்து அதிரடி மன்னன் யூசப் பதான் களத்தில் பிரேவேசித்து கடைசி ஓவா்களில் ரசிகா்களுக்கு வாணவேடிக்கை காட்டினாா். இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 164 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Response