சுரேஷ் ரெய்னா திடீரென நாடு திரும்பியது ஏன்?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு ஆண்டு ஐபிஎல் மட்டைப்பந்து தொடர் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நிலையில், அணியின் பந்து வீச்சாளர், அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது.

இந்த நிலையில், அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா போட்டித் தொடரில் இருந்து விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொந்தக் காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா நாடு திரும்பி விட்டதாகவும் அணி சிஇஒ தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சுரேஷ் ரெய்னா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முழுமையான ஆதரவை வழங்குகிறது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

அப்படியானால், சுரேஷ்ரெய்னா குடும்பச் சிக்கல் காரணமாக நாடு திரும்பியுள்ளார் என்று தெரிகிறது.

Leave a Response