ஐபிஎல் – சன் ரைசர்ஸின் பந்துவீச்சில் சுருண்டது ராஜஸ்தான்

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி, 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியாவில், 11வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. ஜெய்ப்பூரில் இன்று நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் விளையாடின.

‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி தலைவர் வில்லியம்சன், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.ஐதராபாத் அணிக்கு கேப்டன் வில்லியம்சன் (65), அலெக்ஸ் ஹேல்ஸ் (45) கைகொடுக்க, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது.

பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணியால் சன்ரைசர்ஸின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. இதனால், 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 146 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. பொறுப்பாக ஆடிய கேப்டன் ரகானே (65), சஞ்சு சாம்சன் (40) ஆறுதல் தந்தனர்.

Leave a Response