பொதுக்கூட்டம் நடத்தினால்தானே கவலை – கமலின் புதிய உத்தி

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கட்சித் தொண்டர்கள், பொதுமக்களுடன் நாளை (ஏப்.22) காலை யூ-டியூப் நேரலையில் பேசுகிறார்.

இது தொடர்பாக கட்சி உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கமல்ஹாசன் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

எத்தனையோ பணிகள் இருந்தாலும், மய்யத்தில் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான உடனடிக் கடமை ஒன்று இருக்கிறது. அதுதான் நம் கிராமியத்தை வளர்ப்பது. இந்தக் கடமையை ஆற்றுவதற்கு நான் உங்கள் ஆற்றலையும், நேரத்தையும், நாடுகிறேன்.

இது குறித்து உங்கள் அனைவரிடத்திலும் வரும் ஞாயிற்றுக்கிழமை (நாளை) காலை 10.30 மணி முதல் 11:30 மணி வரை YouTube-ல் நேரலையின் மூலம் பேச விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கமல் கட்சி தொடங்கிய பிறகு நடத்தப்பட்ட சில பொதுக்கூட்டங்களில் கூட்டம் வரவில்லை. இது அவர்களுக்குப் பலவீனமாகக் கருதப்பட்டது.

பொதுக்கூட்டம் போட்டால் தானே கூட்டம் வருவது பற்றிக் கவலைப்படவேண்டும். யூடியூபில் பேசினால் கூட்டம் பற்றிக் கவலைப்படவேண்டியதில்லை என்பதால் இந்த உத்தியைக் கமல் கடைபிடிக்கிறார் என்று சொல்கிறார்கள்.

Leave a Response