இபிஎஸ், ஓபிஎஸ் வீடுகள் முற்றுகை – ஆதி தமிழர் பேரவை அதிரடி

16.4.2018 திங்கள் காலை 10 மணிக்கு
முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீடுகள் முற்றுகை.

எஸ்.சி /எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை, நீர்த்து போகச்செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நாடுமுழுதும் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்ற நிலையில்,

மக்களவையில் 37 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களுமாக மொத்தம் 49 எம்.பி களை வைத்துள்ள அதிமுக அரசு இதுவரை எவ்வித அழுத்தத்தையும் மத்திய அரசிற்கு கொடுக்காமல் இருப்பது பட்டியலின மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

கீழ் சபையும், மேல் சபையையும் ஒரே நேரத்தில் முடக்குகின்ற ஆற்றல் இருந்தும், இதுவரை கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குறியது,

எனவே வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழுவான சீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை பாதுகாக்கும் விதமாக அரசியல் சட்டம் 9 வது அட்டவணையில் இணைத்திட வேண்டும் எனவும்,

மோடி அரசிற்கு வழுவான அழுத்தத்தை கொடுக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என முதல்வர் எடப்பாடி.பழனிசாமி வீட்டையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டையும் ஆதித்தமிழர் பேரவை முற்றுகையிட முடிவு செய்துள்ளது.

மத்தியில் அழுத்தம் கொடு!
இல்லையேல் பதவி விலகு!

என்ற முழக்கத்தை முன்வைத்து,

சேலத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி வீட்டை
பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் தலைமையிலும்,

பெரியகுளத்தில் உள்ள துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் தலைமையிலும் முற்றுகையிடுவோம்.

என்று ஆதித்தமிழர்பேரவை அறிவித்துள்ளது.

Leave a Response