பி.வி.சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்றார் சாய்னா நேவால்

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிருக்கான பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் வீராங்கனைகள் சாய்னா நேவால் மற்றும் பி.வி. சிந்து மோதினர்.

இதில் 21-18, 23-21 என்ற நேர்செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி நேவால் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.

இந்தப் போட்டியில் தோல்வியடைந்த பி.வி. சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 26 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களுடன் 3 ஆவது இடத்தில் உள்ளது.

Leave a Response