ஐபிஎல் – கொல்கத்தாவை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்

11 வது ஐபிஎல் போட்டியின் 10 வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஐதராபாத் அணித் தலைவர் வில்லியம்சன் கொல்கத்தா அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

பின்னர் 139 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

ஆட்டத்தின் 18 வது ஓவரின் இறுதிப்பந்தில் சிக்ஸர் அடித்த யூசுஃப் பதான் ஐதராபாத் அணியின் வெற்றியை உறுதி படுத்தினார்.

இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

Leave a Response