அக்டோபர் 8 அன்று நடந்த இரு துயரங்கள் – அதியமான் வேதனை

மதச்சார்பற்ற பன்முக அடையாளம் கொண்ட அரசியல் அமைப்பின் மேல் உறுதியேற்று, பொறுப்பேற்ற பின் இந்து மதச்சார்பு வடிவம் கொடுக்கும் பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியது என்று ஆதித்தமிழர் பேரவை
நிறுவனத்தலைவர் அதியமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…….

அக்டோபர் 8 அன்று நடந்த இரு பெரும் துயரங்கள் மத்திய பாஜக பொறுப்பில் மக்களை ஆளும் பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் செயல்பாடுகள் அறிவிற்க்கு உகந்ததாக இல்லாமல் மாறாக மூடநம்பிக்கைகளை மூர்க்கத்தனமாக திணிக்கின்ற செயலே அன்றி வேறொன்றுமில்லை.

கடந்த 2016 ல் ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான விவகாரங்களில் பல்வேறு முறைகேடுகளும் ஊழல்களும் நடந்திருக்கிறது என்று பல்வேறு ஊடகங்களும் அரசியலாளர்களும்
செய்தி வெளியிட்டதும்

அதைத் தொடர்ந்து ரபேல் ஊழல் பற்றி சென்னையில் பத்திரிக்கையாளர் இந்து ராம் அவர்கள் எழுதிய புத்தக வெளியீடு நிகழ்வு வஞ்சகத்தால் தடைசெய்யப்பட்டு பின்னர் வெளி உலகிற்க்கு அறியப்பட்டு மீண்டும் வெளியீடு என

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ரபேல் போர் விமானத்தை ஒரு வழியாக நேற்று முன் தினம் மத்திய பாதுகாப்பு மந்திரி, உயர் அதிகாரிகள் மற்றும் ஐந்து பேர் அடங்கிய பார்ப்பன புரோகிதர் குழு என இந்திய அரசு செலவில் பிரான்ஸ் சென்று ரபேல் போர் விமானங்கள் பெறுவதற்கும்

அதை வாங்கிய போது விமானத்தின் மீது “ஓம்” என்று இந்தியில் எழுதியும் விமான சக்கரத்தின் கீழ் எலுமிச்சை பழம் வைத்தும், தேங்காய் பழங்கள் பத்தி, சூடம் என மதச் சடங்குகளையும் “சமஸ்கிருத ஸ்லோகம்”. கூறி வாங்கப்பட்டது

அறிவியலையும் அதைக் கண்டுப்பிடித்த விஞ்ஞானிகளையும் கேலிசெய்வது மட்டுமின்றி பல கோடி ரூபாய் ஊழலை மறைப்பதற்கு பக்தி போதையை திணிப்பதென்பது ஒரு நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தது வன்மையாக கண்டிக்கத் தக்கதது.

அடுத்ததாக

டெல்லி ராம்லீலா மைதானத்தில் விஜயதசமி தசரா விழா கொண்டாடப்பட்டுள்ளது.

அதை “துவரகா ஸ்ரீ ராம் லீலா” என்கிற இந்து சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தென்னிந்தியா திராவிட அரசன் என்று வர்ணிக்கப்படும் இராவணன் உருவத்துக்கு அம்பில் தீ வைத்து மோடி கையால்
வீழ்த்துவது என அரங்கேறிய செய்தி பல்வேறு தொலைகாட்சிகளில் மாறி மாறி ஒளிபரப்பு தொடர்ந்து அரங்கேறியது.

இராவணனை இந்தியாவின் பல மாநிலங்களில் வாழுகின்ற பல்வேறு பூர்வகுடிகளும் தலித்துகளும் போற்றி வருகின்ற வேலையில் நாட்டின் பிரதமர் அதை தீயிட்டு வதைப்பதும் பட்டாசு வைத்து வெடித்து கொண்டாடி மகிழ்வது என்பது இராவணனை மதிக்கும் மக்களின் மனதை கடுமையாக பாதித்துள்ளது.

ஒரு நாட்டில் அனைத்து மக்களையும் ஆளுபவர் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மனதை புண்படுத்துவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதே போல் மூடநம்பிக்கைகளை பரப்புவதையும் எப்படி நம்மால் சும்மா கடந்து போக முடியும்

சங்பரிவாரங்களின் செயல் வடிவத்திற்கு உந்துதல் கொடுத்து வரும் பிரதமர் மோடி
மதச்சார்பற்ற பன்முக அடையாளத் தன்மை கொண்ட அரசியலமைப்பின் மேல் உறுதியேற்று இது போன்று பன்முக அடையாளத்திற்கு விரோதமாக செயலாற்றுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது

பக்தி எனும் போதையை புகுத்தி அறிவை மறைப்பதும்…

ராவணனை மதித்து போற்றும் மக்களின் மனதை புண்படுத்தும் இராம லீலாவும் கண்டனத்திற்குறியது.

இரா.அதியமான்,
நிறுவனத்தலைவர்,
ஆதித்தமிழர் பேரவை.
09-10-2019

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response