சீமான் கைது விவகாரம் – பல்லாவரத்தில் நடந்த பரபரப்புகள்

ஏப்ரல் 12 அன்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் சீமான், பாரதிராஜா, பெ.மணியரசன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.அவர்களை பல்லாவரத்தில் உள்ள கிருஷ்ணா திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர்.

இரவில் சீமானுடன் கைது செய்யப்பட்ட மற்றவர்களை விடுவித்த காவல்துறை, சீமான் மீது புனையப்பட்டுள்ள கொலைமுயற்சி வழக்கில் அவரைக் கைது செய்வதாகத் தெரிவித்தனர்.

சீமானை கைது செய்யவிட மாட்டோம் என காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு, தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் அமைப்பாளர் மருத்துவர் பாரதிச்செல்வன் உள்ளிட்டோர் மண்டபத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மண்டபத்துக்கு வெளியே சீமானை விடுவிக்கக்கோரி போராட்டம் நடத்திய நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு 15 நாள் தடுப்பு காவலில் சிறையிலடைக்கப்பட்டன்ர்.

கைது நடவடிக்கை இருக்கும் என்கிற எச்சரிக்கைக்குப் பின்னும் ஏராளமான நாம்தமிழர்கட்சியினர் மண்டபத்துக்கு வெளியே முழக்கமிட்டுக்கொண்டிருந்தனர்.

திரைப்படக்காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு பல்லாவரத்தில் நடந்த நிகழ்வுகளை அங்கிருந்தவர் விவரிக்கிறார்….

இன்று கடைசி நான்கு மணி நேரம் ஆங்கிலப் படத்தை மிஞ்சும் அளவிற்கு காவல்துறை பயப்படுத்தியும் எதற்கும் கலங்காமல் அஞ்சாமல் உறுதியாக இருந்த நாம் தமிழரின் புலிக்குட்டிகளுக்கும்,ஐயா மணியரசனின் தமிழ்த்தேசப் பேரியக்கத் தோழர்களுக்கும்,அண்ணன் தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சி தோழர்களுக்கும்.அண்ணன் தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவை கட்சி உறவுகளுக்கும் மிக மிக நன்றி!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடைசியில் சீமான் விடுவிக்கப்பட்டார்.

Leave a Response