அனுமதியை மீறிய கார்த்திக்கு நோட்டீஸ் அனுப்பிய விலங்குகள் நல வாரியம்..!-


விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் வெளியாவதற்கு முன்பும் பின்பும் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. ‘மெர்சல்’ படத்தில் சில விலங்குகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இந்திய விலங்குகள் நல வாரியம் அனுமதி மறுத்தது. அதனால் அந்த காட்சிகள் ‘மெர்சல்’ படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இதே போன்ற ஒரு சர்ச்சையில் கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படமும் சிக்கியுள்ளது. இந்த படத்திற்காக சமீபத்தில் ரேக்ளா ரேஸ் சீன் படமாக்கப்பட்டது. அதற்காக அவர்கள் முதலில் இந்திய விலங்குகள் நல வாரியத்தை அணுகிய போது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் படக்குழு அதையும் தாண்டி ரேக்ளா ரேஸ் காட்சிகளை படமாகியுள்ளது. இது பற்றி விளக்கம் கேட்டு இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது

Leave a Response