வாக்குக் கேட்டுவந்த பாஜக வேட்பாளருக்குச் செருப்புமாலை – முதியவரின் துணிச்சல்

மத்தியபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து களுக்கு வரும் 17-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

இதற்காக, தஹர் மாவட்டம் தாமோத் பகுதியில் பா.ஜ. வேட்பாளராக போட்டியிடும் தினேஷ் சர்மாக என்பவர் கடந்த ஞாயிறன்று தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாக பிரசாரம் செய்தார். அப்போது சிலர் அவருக்கு மாலை அணிவித்தனர். அப்போது அங்கிருந்த முதியவர் ஒருவர் அருகே கம்பியில் மாட்டியிருந்த செருப்பு மாலையை எடுத்து வேட்பாளர் தினேஷ் ஷர்மாவின் கழுத்தில் போட முயன்றார்.

முதலில் சுதாரித்த தினேஷ் ஷர்மா பொது இடத்தில் பிரசாரம் செய்ய வந்ததால் என்ன செய்வதென்று புரியாமல் செருப்பு மாலையை வாங்கி தானே கழுத்தில் போட்டுக்கொண்டார். உடனே அந்த முதியவர் அவரை ஆத்திரத்தில் திட்டினார். இது வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

பின்னர் நடத்திய விசாரணையில் அந்த முதியவர் தனது வார்டில் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யாமல் பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆத்திரத்தில் வாக்குச் சேகரிக்க வந்த வேட்பாளருக்கு செருப்பு மாலை போட்டு புத்தி புகட்டியதாகக் கூறியது தெரியவந்தது.

மத்தியபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

அந்நிகழ்வின் காணொலி – https://www.youtube.com/watch?time_continue=23&v=DuOG-VDywR4

Leave a Response