ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்,மாவட்டத் தலைநகரான ஈரோடையும், சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவின் மைசூரையும் இணைக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
கோபியில் பல பிரபலமான பள்ளிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. இவற்றில் தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்துப் பயன் பெறுகின்றனர் .
கோபியில் பல நூற்ப்பாலைகள், மற்றும் அதைச்சார்ந்த தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன, இந்நிறுவனங்களில் வெளி மாநிலத்தவர், மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
கோபியைச் சேர்ந்த பலர் சென்னை, பெங்களுரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இயங்கிகொண்டு இருக்கும் ஐ டி நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டு இருக்கின்றனர்.
கோபி, பவானி, பெருந்துறை, சத்தியமங்கலத்தில் வசிப்பவர்கள் சராசரியாக ஐம்பது கிலோமீட்டர் பயணம் செய்து ஈரோடு அல்லது திருப்பூர்க்குச் சென்று தொடர்வண்டி பயண முன்பதிவை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.
சேலம் உட்கோட்டம் ஆரம்பித்தும், கோபியில் தொடர்வண்டி பயண முன் பதிவு அலுவலகம் அமைக்கப்படவில்லை. இதனால்,
கோபிசெட்டிபாளையத்தில் தொடர் வண்டி பயண முன்பதிவு அலுவலகத்தை (PRS ) உடனடியாக நிறுவ வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பல ஆண்டுக் கோரிக்கை.
இதற்காக திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா தீவிர முயற்சி எடுத்தார்.
24-07-2014, 02-08-2016 ஆகிய இரண்டுநாட்கள் பாராளுமன்றத்தில் பேசினார். 02.06.2017 மற்றும் 10-08-2017 ஆகிய நாட்களில் மத்திய அமைச்சரிடம் நேரில் கோரிக்கைக் கடிதம் கொடுத்து வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் பேசியதோடு நில்லாமல், இரயில்வே அமைச்சரைச் சந்தித்து, தொடர்ந்து வலியுறுத்திய அவருடைய தீவிர முயற்சியின் பலனாக கோபி, பவானி, பெருந்துறை, சத்தி மாணவர்கள், விவாசாயிகள், வியாபாரிகள், வேலைக்குச் செல்பவர்களின் நீண்ட காலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
கோபியில் ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு மையம் (PRS) கோபி தலைமை அஞ்சலகத்தில் அமைக்கப்பட்டது. இதற்காக முயற்சி எடுத்த சத்தியபாமா எம்பி ஜனவரி 8,2018 அன்று அதைத் திறந்து வைத்தார்.