பாரதியார் புகைப்படம் உருவானது இப்படித்தான் – பிறந்தநாளில் அரிய தகவல்

பாரதி கிடைத்தார்… பாரதிதாசனால் !

“தமிழகம் தமிழுக்குத்
தகும்உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித்
தவங்கிடக் கையில்
இலகு பாரதிப்
புலவன் தோன்றினான்…
மண்டும் மதங்கள்
அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக்(கு)
அணையா விளக்கவன்.”
-பாவேந்தர் பாரதிதாசன்
(11.9.1946 திருச்சிராப்பள்ளி
வானொலிப் பாட்டரங்கம்)

எங்கும் காட்சிதரும் திருவள்ளுவர், பாரதி -இருவர் படங்களும் உருவாகக்காரணமானவர் பாரதிதாசன்!
தம்நண்பர் ஓவியர் வேணுகோபால்சர்மா வழியாக அவர் உருவாக்கியதே இன்றுள்ள திருவள்ளுவர் ஓவியம்

இப்போதுள்ள பாரதி படமும், பாரதியைப் படப்பிடிப்புநிலையம் அழைத்துச்சென்று பாவேந்தர் எடுத்த படமே ! ஒளிப்படத்தில் உள்ள பாரதியார்.

உண்மை உருவம் பாரதிதாசனுக்கு நிறைவுதரவில்லை.அதனை ஓவியமாக்குமாறு ஓவியர் ஆரியாவிடம்ஒப்படைத்தார்.(சென்னைக் கோட்டையில் இந்திய தேசியக்கொடியைஏற்றிய விடுதலைவீரர் பாசியமும்ஓவியர் ஆரியாவும் ஒருவரே!)

உண்மையான படத்தில் * பாரதிக்குப்பொட்டு கிடையாது! ஓவியத்தில்பொட்டுவைத்துப் பாரதியோடு ‘ விளையாடிய’வர் ஆரியா!
வரலாற்று விழிப்புள்ள எவரும் பொட்டு வைத்த பாரதி படத்தை எச்சரிக்கையுடன் தவிர்த்துவிடுவார்கள்.

– செந்தலை கவுதமன்

Leave a Response