முதன்முறையாக ஹாலிவுட் படத்தில் நடித்துள்ள நெப்போலியன்


கடந்த 26 வருடங்களில் கிராமத்தானாக முறுக்கு மீசையுடன், கோடு போட்ட அண்ட்ராயருடன் பல படங்களில் நாம் பார்த்த நடிகர் நெப்போலியன், தற்போது முதன்முறையாக ஹாலிவுட்டில் ‘டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதைக்கு திருப்புமுனையான, அருங்காட்சியக பொறுப்பாளர் என்கிற ஒரு முக்கியமான வேடமேற்று நடித்துள்ளார் நெப்போலியன்.

குற்றப்பின்னணியை கதைக்களமாக கொண்ட இத்திரைப்படத்தை எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர் சாம் லோகன் கலேகி இயக்குகிறார். நைன் ரூஜாக தற்காப்புக் கலை வல்லுநர் ஜெஸ்ஸி டீன் நடிக்கிறார். ஜெஸி ஜென்சென், பாபி லேனென், ஜான். சி பார்மன், குரோவர் மெக்கேன்ட்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஹிப்-ஹாப் பாடகர் எமினெம்மின் இளைய சகோதரர் நாதன் மாதேர்ஸ், இத்திரைப்படத்தின் மூலம் புலனாய்வு அதிகாரியாக அறிமுகமாகிறார். இசையமைத்ததோடு மட்டுமில்லாமல் ஸ்விப்ட்டி மக்வே நடித்தும் அசத்தியிருக்கிறார். இத்திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகர் மற்றும் இசை அமைப்பாளரான தேவன் ஏகாம்பரமும் அறிமுகமாகிறார்.

Leave a Response