சிவகார்த்திகேயனின் புதிய கொள்கை..!


சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’. படம் வரும் டிச-22ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மோகன்ராஜா டைரக்சனில் அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் இந்த விழாவில் வெளியிட்டார்.

“நான் இதுவரைக்கும் ஒரேயொரு விளம்பர படத்தில்தான் நடிச்சுருக்கேன். இனிமேல் எந்த விளம்பரப் படங்களிலும் நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். அதற்கு காரணம் வேலைக்காரன் படத்தின் கதைதான். இது குறித்து நான் அதிகம் விளக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். விளக்கினால் கதையை சொன்ன மாதிரி ஆகிவிடும். படம் வந்த பின்பு நான் ஏன் இப்படியொரு முடிவெடுத்தேன் என்பது உங்களுக்கே தெரியும்” என்றார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நல்ல முடிவைத்தான் எடுத்துள்ளார்.. மற்ற நடிகர்களுக்கு முன்னுதாரணமாகவும் மாறியுள்ளார்.

Leave a Response