அருந்ததி இசையமைப்பாளருடன் ‘யாகம்’ நடத்திய ஷங்கரின் சீடர்..!


தெலுங்குப்படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு இசையமைப்பாளர் ராஜ்கோட்டி என்கிற பெயர் நன்கு பரிச்சயமாகி இருக்கும். அனுஷ்கா நடித்த அருந்ததி படத்தின் இசையமைப்பாளரும் இவரே.. சுமார் 450 படங்களுக்கு மேல் இசையைத்துள்ள இவர், தற்போது கோட்டி என்கிற பெயரில் இப்போது தமிழில் ‘யாகம்’ என்கிற படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றிய நரசிம்மா என்பவர் இந்தப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் கடவுள் நம்பிக்கை கொண்ட கிராமம் ஒன்றை தீயசக்திகள் தாக்குவது போலவும், அதில் நாயகன் சிக்கிக்கொண்டு அதிலிருந்து தப்பித்து தன்னையும் தன் கிராமத்தையும் காப்பது போன்றும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தில் அறிமுக நாயகனாக ஆகாஷ்குமார் நடித்துள்ளார்.. அதுமட்டுமல்ல எம்.பியும் சீனியர் நடிகையுமான ஜெயப்ரதா மற்றும் நெப்போலியன், நாசர், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட ஒரு நட்சத்திர கூட்டமே இதில் நடித்துள்ளனர்.

Leave a Response