பெண்களைக் கேவலப்படுத்தும் துப்பறிவாளன்- வெளுக்கும் எழுத்தாளர்


சமீபத்தில் பார்த்த ஆண்மய்ய சினிமாக்களில் உச்சம் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’.

படத்தில் மூன்று பெண்கள். ஒருவர் பிக்பாக்கெட், இன்னொருவர் கொலைகாரி, மூன்றாமவரோ படுத்த படுக்கையிலிருந்து எழுந்து நடமாட முடியாத நோயாளி.

சந்தர்ப்பச் சூழ்நிலையால் ‘பிக்பாக்கெட்’ ஆன நாயகி, ‘நல்ல வாழ்க்கை’ வாழ்வதற்காக நாயகனிடம் வேலை கேட்கிறார். நாயகனோ அவர் கையில் துடைப்பத்தைக் கொடுத்து, கதவைப் பூட்டி தரையில் தள்ளுகிறார். நாயகியோ தரையில் விழுந்து, மகசசே விருது கிடைத்ததைப்போல மகிழ்ச்சியில் பூரிக்கிறார். நாயகன் ஒரு காட்சியில்கூட நாயகியைக் குறைந்தபட்ச மரியாதையுடன் நடத்துவதில்லை. நாயகி க்ரீன் டீ போட்டுக்கொடுக்கிறார். ”கழுதை மூத்திரம் போல இருக்கு” என்கிறார் நாயகன். நாயகியின் கண்களோ காதலில் மிதக்கின்றன. கழுதை மூத்திரத்தில் காதல் மலரும் முதல் படம் இதுவாகத்தானிருக்கும்.

இப்படி துடைப்பம் போல நடத்தப்படும் நாயகி, நாயகனுக்காகக் கத்திக்குத்து பட்டு தியாகி ஆகிறார். இன்னொரு பெண்ணோ தன் உடலை வைத்து வலைவிரித்து, ஒருவனைக் கொல்கிறார். தேவையே இல்லாமல் ஒரு வயதான தம்பதியையும் இலவச இணைப்பாகக் கொல்கிறார். நோயாளிப்பெண்ணோ மிஷ்கின் படத்தில் நடித்த பாவத்திற்காக, தலையணையால் அமுக்கப்பட்டுச் சாகிறார்.

படத்தில் மூன்று பெண்கள். மூன்று பெண்களுமே செத்துப்போகிறார்கள். ஆனால் இறுதிக்காட்சியில் ஒரு நாயைக் கொன்றதற்காக, வில்லன் சிறுவனிடம் மன்னிப்பு கேட்பதால் இது உலக சினிமா ஆகிவிடுவதாகச் சொல்லப்படுகிறது. -சுகுணாதிவாகர்

Leave a Response