நடிகை நமீதா பற்றி பிக்பாஸ் ரைசா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

2004 ஆம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் நமீதா. அதனைத் தொடர்ந்து நிறையப்படங்களில் நடித்தார்.

இறுதியாக 2016-ம் ஆண்டு தமிழில் ‘இளமை ஊஞ்சல்’ படத்திலும், மலையாளத்தில் புலிமுருகன் படத்திலும் நடித்திருந்தார். விரைவில் பரத்துடன் இவர் நடித்துள்ள ‘பொட்டு’ வெளியாகவுள்ளது.

அண்மையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பு, சில காலம் ஓய்வில் இருந்து வந்தார் நமீதா

தற்போது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசா தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலிப் பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் “நமீதா மற்றும் வீர் இருவரும் திருமணம் செய்யவுள்ளார்கள். இதை அறிவிப்பதில் சந்தோஷப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதே பதிவில் நடிகை நமீதா,நானும் வீரேந்திராவும் நவம்பர் 24-ம் தேதி திருமணம் செய்யவுள்ளோம். உங்களது அனைவருடைய அன்பும், ஆதரவும் வேண்டும். நன்றி மச்சான்ஸ் என்று கூறியிருக்கிறார்.

Leave a Response